கேளுங்க சொல்கிறோம்
சிவா.எம், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்: தர்மம் எப்போது வெல்லும்... எப்போதும் தர்மமே வெல்லும். ராமையா.ஆர், தக்கலை, கன்னியாகுமரி: அன்ன தானத்திற்கு எதை தானமாக கொடுக்கலாம்?பணம், பொருள், உழைப்பு என எதுவாக இருந்தாலும் கொடுங்கள். சங்கரி.சி, ஜூஜூவாடி, பெங்களூரு: வயதில் மூத்தவருக்கு இளையவர் திருநீறு பூசலாமா... கூடாது.பர்வதவர்த்தினி.கே, சத்திரப்பட்டி, விருதுநகர்: கடவுள் பெயரை (சிவ, ராம, முருகா) ஸ்டிக்கராக அச்சிட்டு கொடுத்தால்... நன்மை தேடி வரும். புண்ணியம் சேரும்.சியாமளா.தி, பல்லடம், திருப்பூர்: குடும்பத் தலைவர், தலைவிக்குரிய பண்புகள்...ஆன்மிக சிந்தனை, பொறுமை, நிதானம், விட்டுக்கொடுத்தல், நேர்மறை எண்ணம்.முரளி.கி, வண்டலுார், காஞ்சிபுரம்: கோயில் சொத்தை திருடினால்... கடவுளின் சொத்தை திருடுபவரின் வம்சம் அழியும். மஹதி.பி, மருதமலை, கோயம்புத்துார்: குலதெய்வத்தின் சாபம் இருந்தால்...திருமணம், தம்பதி ஒற்றுமை, குழந்தைப்பேறு இவற்றில் தடை ஏற்படும். ராஜஸ்ரீ.கு, உழவர்கரை, புதுச்சேரி: அமிர்த கலசம் ஏந்திய தட்சிணாமூர்த்தியை வீட்டில் வழிபடலாமா?வழிபடலாம். நிம்மதி, திருமண யோகம், பணம் சேரும். ரேவதி.ரா, பசுவந்தனை, துாத்துக்குடி: பாடத் தொடங்கும் முன் 'திருச்சிற்றம்பலம்' என ஓதுவார் உச்சரிப்பது ஏன்?நடராஜரை வழிபடுவதற்காக இந்த மந்திரத்தை உச்சரிக்கின்றனர்.