கேளுங்க சொல்கிறோம்
கனகா.வி, குரோம்பேட்டை, சென்னை: வாஸ்து அன்று விரதம் இருந்தால் வீடு கட்டும் யோகம் வருமா...திங்கள் தோறும் சிவபெருமானுக்கு விரதம் இருங்கள். வீடு கட்டுவீர்கள். ரங்கசாமி.ஆர், வடுகபட்டி, தேனி: ஸ்மார்த்த ஏகாதசி, சர்வ ஏகாதசி இதில் எந்த நாளில் விரதம் இருக்கலாம்?சர்வ ஏகாதசி அன்று விரதம் இருங்கள். தன்யா.சா, காமராஜ் நகர், கடலுார்: பெண் பாவம் பொல்லாதது ஏன்? பெண் என்பவள் பொறுமையானவள். அவளின் கண்ணீர், சாபம் தலைமுறையை பாதிக்கும். கருப்பசாமி.கே, வீரவநல்லுார், திருநெல்வேலி:விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவிக்கலாமா?கூடாது. அருகம்புல், மாலை சாத்துங்கள். வித்யாஸ்ரீ.எம், மேலுார், மதுரை: நடராஜரும், ரங்கநாதரும் தெற்கு நோக்கி இருப்பது ஏன்?எமனின் திசை தெற்கு. அவரால் பக்தர்களுக்கு கெடுதல் வராமல் இருக்க, தெற்கு நோக்கி உள்ளனர். மூர்த்தி.ஏ, புல்லரம்பாக்கம், திருவள்ளூர்: சனி ஆதிக்கத்தில் பிறந்தவர் எந்த தெய்வத்தை வழிபடலாம்?சனிக்கும் பக்திக்கும் தொடர்பு இல்லை. எந்த தெய்வத்தையும் வழிபடலாம். முனியசாமி.பி, பெங்களூரு: குழந்தைக்கு எப்போது திருஷ்டி சுற்றலாம்?தீட்டு கழிக்கும் சடங்கு நடத்தும் வரை சுற்ற வேண்டாம். அதன் பின் செவ்வாய் அல்லது வெள்ளியன்று சுற்றுங்கள். தேவகி.எம், நேதாஜிபுரம், கோயம்புத்துார்: தந்தைவழி உறவுகள் என்னுடன் நீடிக்க... ஞாயிறு தோறும் சிவபெருமானுக்கு விளக்கேற்றுங்கள். முருகன்.கு, நாகர்கோவில், கன்னியாகுமரி: நீண்ட நாளாக உதவி செய்யும் நண்பருக்கு கைமாறு செய்ய முடியவில்லை, என்ன செய்யலாம்?வருந்த வேண்டாம். அவருக்கு நன்றியுடன் இருங்கள்.