உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

பூரணி.மு, கீர்த்தி நகர், டில்லி: நல்லவன் வாழ முடியுமா...நல்லவனாக மட்டுமல்ல; வல்லவனாகவும் இருந்தால் வாழலாம். தேவகி.யா, பிள்ளையார் பாளையம், காஞ்சிபுரம்: பூஜையில் வைத்த வெற்றிலையை என்ன செய்யலாம்?சாப்பிடலாம். பசுவிற்கு கொடுக்கலாம். இல்லையென்றால் கால் படாத இடத்தில் வைத்து விடுங்கள். இளமாறன்.மு, இளையான்குடி, சிவகங்கை: கோயிலை சாத்திய பின் வாசலில் சூடம், விளக்கு ஏற்றலாமா?கோயில் திறந்திருக்கும் போது மட்டுமே ஏற்றலாம். யாழினி.யு, மயிலாப்பூர், சென்னை: அதர்மம் அதிகரிக்கிறதே...கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும், எப்போதும் கெடுதலையே நினைப்பவர்களும், இப்படிப்பட்டவர்களைக் கண்டு நல்லவர்கள் அமைதியாக இருப்பதுமே காரணம். சரவணன்.பா, குறிஞ்சிப்பாடி, கடலுார்: வருமானம் முழுதும் வீட்டிற்கே செலவாகிறது. தர்மம் செய்ய வழி காட்டுங்கள்.தர்மத்திற்காக செலவழிக்க விரும்பும் பணத்தை முதலில் எடுத்து வையுங்கள்.நீலகண்டன்.ரா, நாரணம்மாள்புரம், திருநெல்வேலி: அன்னதானம் செய்ய முடியாவிட்டால்...அன்னதானம் செய்யும் இடத்தில், உங்கள் உடல் உழைப்பை கொடுங்கள். சியாமளா.சி, வால்பாறை, கோயம்புத்துார்: சிறுமிகளை கோலமிட பழக்கலாமா... பழக்கலாம். கோலம் இடுவதால் மனத்தெளிவு கிடைக்கும். விமலா.து, திருவிதாங்கோடு, கன்னியாகுமரி: வாஸ்து தோஷம் இருந்தால்...வாஸ்து சாஸ்திரத்தை மீறினால் தோஷம் ஏற்படும். அதற்காக இடிக்கத் தேவையில்லை. நிபுணரிடம் கேட்டால் எளிய பரிகாரம் சொல்வர். தனுஷ்.கே, வீரபாண்டி, தேனி: புகழ் பெற்ற நரசிம்மர் கோயில்கள் எங்குள்ளன...நாமக்கல், சோளிங்கர், பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கப்பெருமாள் கோயில், மதுரை ஒத்தக்கடை.