சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : மார் 15, 2024 | ADDED : மார் 15, 2024
* காயத்ரி மந்திரம் சொல்பவரின் நினைவாற்றல் பெருகும். அவருக்கு ஞானம் கிடைக்கும். * கடவுள் ஒருவரை வெற்றி பெறச் செய்ய நினைத்தால் அதை தடுக்க முடியாது. * தாமரை, செண்பக மொட்டுகள் தவிர மற்ற பூமொட்டுகளால் பூஜை செய்யக் கூடாது. * ஒவ்வொரு ஹிந்துவும் நெற்றியில் திருநீறு அல்லது திருமண் பூசியிருப்பது அவசியம். * ஒவ்வொருவரும் அவரவர் பொருளாதார நிலைக்கேற்ப தர்மம் செய்ய வேண்டும். * அமைதியை நிலைநாட்டப் பாடுபடுபவர் கடவுளின் குழந்தைகள். * கீழ்ப்படிதல் தெய்வீக குணம் (தேவ குணம்). கீழ்ப்படியாமை அரக்க குணம்.