உள்ளூர் செய்திகள்

பலன் தரும் பரிகாரம் - சுபிட்சமுடன் வாழ...

காசி விஸ்வநாதர் கோயிலில் தினமும் இரவில் அர்த்தஜாம பூஜையில் ஜபிக்கும் ஸ்லோகம் இது. இதை நடராஜர் வழிபாட்டுக்குரிய ஆனி திருமஞ்சனத்தன்று (ஜூலை8) சொன்னால் சுபிட்சம் உண்டாகும். திங்கட்கிழமைகளில் சொல்ல மனவலிமை அதிகரிக்கும். மன்மாதா ஸஸி சேகரோ மம பிதா ம்ருத்யுஞ்ஜயோ மத்குரு:ந்யக்ரோதத்ரும மூலவாஸாஸிகோ மத் ஸோதர:ஸங்கர:மத்பந்துஸ் த்ரிபுராந்தகோ மம ஸகா கைலாஸ சைலாதிப:மத்ஸ்வாமீ பரமேஸ்வரோ மம கதி: ஸாம்ப:ஸிவோ நேதர:பொருள்: பிறைசூடிய சிவனே என் தாய். எமனை வென்ற ஈசனே என் தந்தை. ஆலமரத்தடியில் தட்சிணாமூர்த்தியே எனக்கு ஆசான். மங்களத்தை அருளும் மகாதேவனே என் சகோதரன். திரிபுர சம்ஹாரம் செய்த ருத்ரனே எனக்கு உறவினர். கைலாய மலையின் அதிபரே என் தோழர். பரமேஸ்வரனே என் தெய்வம். அம்பிகையுடன் அருள்புரியும் உமாமகேஸ்வரா! உம்மை விட்டால் வேறு கதி எனக்கு இல்லை. சுபிட்சமாக வாழ நீயே அருள்புரிய வேண்டும்.