கோட்டைக்குள் ராஜா
UPDATED : ஜன 07, 2011 | ADDED : ஜன 07, 2011
சபரிமலை காடு முழுவதும் ஐயப்பனின் அருளாட்சி நடந்து வருகிறது. இப்பகுதியை 'ஐயப்பனின் பூங்காவனம்' என்று குறிப்பிடுவர். எரிமேலியில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள பேரூர்த்தோடு என்னும் இடத்தில் இருந்து பூங்காவனம் ஆரம்பமாகிறது. இங்கிருந்து ஏழு கோட்டைகளைக் கடந்தால் தான் ஐயப்ப தரிசனம் கிட்டும். கோட்டபுறம், காளைகெட்டி, உடும்பாறமலை, கரிமலை, சபரிபீடம், சரம்குத்தி, திருப்படி என்பவையே அந்தக் கோட்டைகள்.