கேளுங்க சொல்கிறோம்!
* இழந்த பணத்தை மீண்டும் பெற பரிகாரம் உண்டா?எம்.வர்ஷிகா, கடலுார்''கார்த்த வீர்யார்ஜுணோ நாமராஜாபாஹு ஸஹஸ்ரவான்!தஸ்ய ஸ்மரன மாத்னே ஹ்ருதம்நஷ்டம் ச லப்யதே!''இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியாதவர்கள், “ஆயிரம் கைகளையுடைய கார்த்தவீர்யார்ஜுணனே! அரசருக்கு அரசராகிய தெய்வமே! உம்மை வழிபடும் எனக்கு நான் இழந்தவற்றை திருப்பித் தந்து அருள வேண்டும்''.நேர்த்திக்கடனை நிறைவேற்ற தாமதம் ஏற்பட்டால்....?பி.சந்திரேஷ், திருவள்ளூர்பரம்பரையாகச் செய்வது, விருப்பத்திற்காகச் செய்வது என நேர்த்திக்கடன் இரண்டு வகைப்படும். இதில் குடும்ப வழக்கில் உள்ளதை தள்ளிப் போடக் கூடாது. பிரச்னை வரும் போது 'தப்பித்தால் போதும்' என பொருளாதாரத்தை யோசிக்காமல் செய்யும் வேண்டுதலால்தான் தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க நம்மால் முடிந்ததை வேண்டிக் கொள்வது நல்லது.விநாயகர், அனுமனைச் சனி பிடிக்கவில்லையாமே...ஏன்?ஆர்.கவின், ராமநாதபுரம்ராமரின் ஜென்ம ராசிக்கு குருபகவான் வந்தபோது காட்டுக்குச் செல்ல நேர்ந்தது. ஆனால், அவரது பக்தரான அனுமனுக்கு அவரது தவ வலிமையால் சனி பிடிக்கவில்லை. 'இன்று போய் நாளை வருகிறேன்' என சனி கொடுத்த வாக்குறுதியால் விநாயகரையும் பிடிக்கவில்லை. எனவே இவர்களை வழிபட்டால் பாதிப்பு நீங்கும்.* விநாயகருக்கு தோப்புக்கரணம் இடுவது ஏன்?பி.அவந்திகா, திருப்பூர்தோர்பி+கர்ணம்=தோர்பிக் கர்ணம். இதுவே தோப்புக்கரணம் ஆகி விட்டது. தோர்ப்பி என்றால் கைகள்; கர்ணம் என்றால் காது. கைகளால் காதுகளைப் பிடித்து உட்கார்ந்து எழுவதே தோப்புக்கரணம். இதனைக் கண்டு விநாயகர் நமது தீவினைகள், தடைகளை போக்குகிறார்.* மகான்களின் சமாதியில் சிவலிங்கம் இருப்பது ஏன்?கே.தட்சிண், விருதுநகர்சிவனை பூஜித்து சர்வகாலமும் சிவ சிந்தனையுடன் வாழ்ந்தவர்கள் மகான்கள். அவர்களை சிவனின் அம்சமாகக் கருதி, வழிபடுவதற்காக சமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்கின்றனர்.வீட்டில் மீன்கள் வளர்க்கலாமா?ஆர்.மிதுன்சாய், மதுரைசுதந்திரமாக நீரில் வாழும் மீன்களை வீட்டில் வளர்ப்பது சரியல்ல. மீன் வளர்த்தால் வாஸ்து தோஷம் நீங்கும் என மூடநம்பிக்கையும் பரவி விட்டது. கோயில் தீர்த்தம், குளங்களில் உள்ள மீன்களுக்கு பொரி வாங்கிக் கொடுங்கள். கிரக தோஷம் நீங்கும். * கல்லில் செய்த வலஞ்சுழி விநாயகரை வழிபடலாமா?சி.நவின், சென்னைவழிபடலாம். கருங்கல், பஞ்ச லோகம், தங்கம், வெள்ளி, தாமிரம் இவற்றில் செய்த சிலைகளை வீட்டில் பூஜிக்கலாம். மாக்கல், பிளாஸ்டிக் சிலைகளைத் தவிருங்கள்.