உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

குழந்தைகளை வாழ்த்த மந்திரம் உண்டா...வி.ஸ்ரீராம், மைசூருகல்வியும் ஒழுக்கமும் குழந்தைகளுக்கு அவசியம். ''சகல வித்யா பாரங்கதா சித்திரஸ்து| சகல சத்குண ப்ராப்திரஸ்து'' என்னும் மந்திரத்தை சொல்லி வாழ்த்துங்கள்.வேண்டுதல் நிறைவேற சுந்தர காண்டத்தை எத்தனை நாள் படிக்க வேண்டும்?சி.ஸ்ரீவித்யா, காஞ்சிபுரம்ஏழு நாட்கள் படிக்கலாம் அல்லது வேண்டுதல் நிறைவேறும் வரை படியுங்கள். ஸ்ரீமதி, சவுபாக்கியவதி இதில் எது பெண்களுக்கு பொருத்தம் ?கே.காயத்ரி, சிவகங்கைஸ்ரீமதி என்பது திருமணமான பெண்களைக் குறிக்கும். சவுபாக்கியவதி என்பது எல்லா பெண்களையும் குறிக்கும் சொல். இடத்திற்கு ஏற்ப அதனை பயன்படுத்துங்கள்.தலவிருட்சத்தை வழிபடுவது அவசியமா?ஆர்.ராகவன், திருப்பூர்மூர்த்தி - கடவுள், தலம் - தல விருட்சம், தீர்த்தம் - புனித நதி அல்லது குளம். தலவிருட்சம் உள்ள கோயிலில் இந்த மூன்றையும் வழிபடுவது நல்லது. இரும்பு மோதிரத்தை அணிகிறார்களே...ஏன்?கே.ரவி, கள்ளக்குறிச்சிசனீஸ்வரருக்குரிய உலோகம் இரும்பு. சனியின் பாதிப்பில் இருந்து விடுபட இதனை அணிகிறார்கள். சூலத்தில் எலுமிச்சம்பழம் குத்துவது ஏன்?எம்.திரவுபதி, மதுரைஅலங்காரத்தின் போது சூலத்திற்கு எலுமிச்சம்பழம் வைக்க வேண்டும். ஆனால் கீழே விழும் என்பதால் நுனியில் குத்தி வைத்தனர். பூஜைக்கு எவர்சில்வர் பாத்திரம் கூடாதாமே...பி.வசந்தி, கன்னியாகுமரிஇரும்பில் இருந்து எவர்சில்வர் தயாரிக்கப்படுவதால் பூஜைக்கு பயன்படுத்தக் கூடாது. பீமரத சாந்தி என்றால் என்ன?மங்கை, திருநெல்வேலிஎமதர்மனின் பற்களில் நான்கு ஆபத்தானவை. அவை உக்ர ரதம், ருத்ர ரதம், பீம ரதம், விஜய ரதம். 'ரதம்' என்பது பல்லைக் குறிக்கும். இவை ஒவ்வொன்றினாலும் குறிப்பிட்ட வயதில் கண்டம் ஏற்படுவதால் ஆயுள் ஹோமம் செய்வது அவசியம். 59 வது வயதில் உக்ரரத சாந்தி, 69ல் ருத்ரரத சாந்தி, 70 ல் பீமரத சாந்தி, 77ல் விஜயரத சாந்தி ஹோமம் செய்வர்.கோயிலை வலம் வருவதாக கனவு கண்டால் நல்லதா?என்.நாகப்பன், கடலுார்நல்லது. 'நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்' என்ற பாடலைக் கேட்டதில்லையா! எந்த வயதில் விரதமிருக்கத் தொடங்கலாம்?டி.ஸ்ரீதர், மாடம்பாக்கம், சென்னைவிரத நடைமுறைகளைப் புரிந்து கொண்டு விரும்பும் வயதில் தொடங்கலாம்.