உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

த.நேரு, வெண்கரும்பூர், கடலுார். *வருமானம் இருந்தும் முன்னேறவில்லையே...இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்வதுதான் உண்மையான மகிழ்ச்சி. முன்னேற்றமும் அதுவே.எம்.ஆனந்தி, காயல்பட்டினம், துாத்துக்குடி.*குழந்தைகளிடம் படிக்கும் பழக்கம் குறைகிறதே...அலைபேசி, இணையதள பயன்பாட்டை குறைத்தால் மட்டுமே படிக்க நேரம் கிடைக்கும். இதற்கு பெற்றோர், ஆசிரியர் வழிகாட்ட வேண்டும். கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதுார், கன்னியாகுமரி.*கார்த்தவீரியன், வீரபத்திரர் இருவரும் ஒருவரா?சிவனிடம் தோன்றிய இவர்கள் வெவ்வேறானவர்கள். மனிதனாக வாழ்ந்து தீயசக்திகளை அழித்தவர் கார்த்தவீரியன். தெய்வமாக இருந்து தீயசக்திகளை அழிப்பவர் வீரபத்திரர். எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோவைப்புதுார், கோயம்புத்துார். *அம்மனுக்கு கண்மலர் செலுத்துவது ஏன்?கண்நோய் தீர்வதற்காக கண்மலரை காணிக்கை செலுத்துகிறோம். அப்போது மாவிளக்கை ஏற்றுங்கள். எம்.கமலேஷ், சோழிங்கநல்லுார், சென்னை.*குரங்கு, நாய் அடிக்கடி என்னை துரத்துகின்றன. என்ன செய்யலாம்?இது விலங்குகளின் இயல்பு. அவற்றை விட்டு விலகுங்கள்.கே.ஜனா, புதுடில்லி. *மிளகு சாதத்தை அன்னதானம் செய்யலாமா?செய்யலாம். அர்த்தஜாம பூஜையின் போது கோயிலில் நைவேத்யமாக மிளகு சாதம் படைப்பர். அதற்கு பொருளுதவி செய்யுங்கள்.ஆர்.அருணா, திருப்பரங்குன்றம், மதுரை.*பாடல்கள் பாடும் முன் தெய்வத்திடம் உத்தரவு கேட்கணுமா?தேவையில்லை. பக்தியுடன் பாடினால் போதும்.பி.ஜெயா, மைசூரு.*யந்திரத்தில் மந்திரங்களை உருவேற்றுவது எப்படி?மந்திரத்தை உச்சாடனம் (தொடர்ந்து ஜபிப்பது) செய்தால் யந்திரத்தில் ஏறும். இதனை 'உருவேறத் திருவேறும்' என்பர்.க.வள்ளி, ஆண்டிபட்டி, தேனி.*அம்மன் தனித்து அருள்புரியும் தலங்களைச் சொல்லுங்கள்?சமயபுரம், புன்னைநல்லுார், பண்ணாரி மாரியம்மன், மேல்மலையனுார் அங்காளம்மன், ஆனைமலை மாசாணியம்மன் என எத்தனையோ தலங்கள் உள்ளன.என்.சம்பத், உத்திரமேரூர், காஞ்சிபுரம்.*இறப்புத் தீட்டின் போது சந்தியாவந்தனம் செய்யலாமா?தீட்டு காலத்தில் அர்க்கியம் இன்றியும், வியாஹிருதி நீக்கி மந்திரம் ஜபித்தும் சந்தியாவந்தனம் செய்யலாம். இதற்கான விளக்கத்தை புரோஹிதர்களிடம் கேளுங்கள்.