உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

** செவ்வாய் மங்கள நிகழ்ச்சிகளுக்கு உகந்ததல்ல என்பது சரிதானா?எஸ்.புவனா, சூளைமேடுஇந்தக் கருத்து சரியானதல்ல. செவ்வாயின் பெயரே 'மங்களன்' என்பது தான். அதனால், செவ்வாய் செல்லும் ராக்கெட்டைக் கூட 'மங்கள்யான்' என்கிறார்கள். இந்தியில் செவ்வாயை 'மங்கல்வார்' என்கிறார்கள். வடமாநிலங்களில், செவ்வாயன்று திருமணமே நடத்துகிறார்கள். கிரகங்களில் பூமிக்கு உரியவர் செவ்வாய். பூமி வாங்க, சிலர் செவ்வாயைத் தேர்ந்து எடுத்து பத்திரம் பதிவு செய்கின்றனர். செவ்வாயில் பொருள் வாங்கினால், செல்வம் பெருகும்.* 'சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்' என்கிறது சிவபுராணம். ஆனால், பொருள் புரிந்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் சொல்கிறார்கள். எதை சரியென்று ஏற்பது?த. கண்ணன், கோவைபொருள் உணர்ந்து சொன்னால், சிவனடியின் கீழ் இருப்பது உறுதி என்ற கருத்தில் தான் சிவபுராணம் அப்படி சொல்கிறது. அதற்காக, பாமரராகிய கண்ணப்பரும் சிவனின் திருவடி நிழல் சேர்ந்ததையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.* சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணிய சுவாமிக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்று ஏன் சொல்கிறார்கள்?தேவகன்னிகா, உசிலம்பட்டிகை, கால் வலி இருந்தால் சுக்கை உரசிப்பூசுவதுண்டு. சுக்கு கசாயம் சளித்தொல்லை உள்ளிட்டவற்றை நீக்குகிறது. இதற்கு எந்த பக்க விளைவும் கிடையாது. அக்காலத்தில், வாரம் ஒருமுறை சுக்கு கசாயம் குடிப்பது வழக்கமாய் இருந்தது. இன்று பல நோய்கள் வர காரணம், நாம் நம் பாரம்பரிய மருந்துகளை மறந்தது தான்! இதே போல, தெய்வங்களிலேயே உயர்ந்தவர் சுப்பிரமணியர். இது சமஸ்கிருதப் பெயர். இதை 'சு+ப்ரஹ்மண்யர்' என்று பிரிப்பர். 'சு' என்றால் 'மேலான'. தன்னை எதிர்த்த சூரர்களை மற்ற தெய்வங்கள் வதம் செய்தனர். ஆனால், எதிரியான பத்மாசுரனைக் கொல்லாமல் ஆட்கொண்டு, எதிரியையும் மன்னித்தவர் என்பதால், இவர் தெய்வங்களில் உயர்ந்தவர் ஆகிறார்.கணவன், மனைவி புரிந்து வாழ்வது பூர்வஜென்ம புண்ணியத்தைப் பொறுத்ததா?காசிதாசன், வந்தவாசிஇதிலென்ன சந்தேகம்! பூர்வ ஜென்மத்தில் நாம் நமது மனைவியை துன்பப்படுத்தி இருந்தால், இந்தப்பிறவியில் அதே துன்பத்தை தர அவள் பிறப்பெடுத்து வந்திருப்பாள். நல்லபடியாக நடத்தியிருந்தால், விட்டுக்கொடுத்து செல்வாள். இது கணவன், மனைவி உறவுக்கு மட்டுமல்ல! எல்லா வகையான நிகழ்வுகளுக்கும் பொருந்தும்.கணவனுக்கு மனைவி திருநீறு இட்டு விடுகிறார். இது சரியா?என்.பி.குமார், திண்டுக்கல்இதெல்லாம் இப்போது 'அன்பு' என்ற பெயரில் ஸ்டைலாகி விட்டது. நம் நாட்டில் நடக்கும் அநியாயம், அக்கிரமங்களுக்கு காரணமே, நம் பழைய சம்பிரதாயங்களை மறந்து விட்டது தான்.