உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

**ஆனந்தன், அருப்புக்கோட்டை: பெயரோடு 'ஸ்ரீ' என்று சேர்த்துக் கொள்கிறோம். இதற்கு என்ன காரணம்?'ஸ்ரீ' என்பதற்கு 'திரு' என்று பொருள். 'ஸ்ரீ தேவி' என்று லட்சுமியைக் குறிப்பிடுவர். திருமகள் என்பது அதன் பொருள். பெண்களின் பெயர்களோடு ஜெயஸ்ரீ, பாக்யஸ்ரீ என்று வருவதும் லட்சுமியின் பெயர்களே. ஆண்களுக்கு 'ஸ்ரீ' என்றும், பெண்களுக்கு 'ஸ்ரீமதி' என்றும் மரியாதை கருதி சொல்வது லட்சுமி கடாட்சத்துடன் அவர்கள் வாழ வேண்டும் என்பதற்காகத் தான். * பிள்ளையார் பாடல் ஒன்றில், 'நந்தி மகன்தனை' என்று வருகிறது. இதற்கு என்ன பொருள்?வெ.சங்கரி, புதுபெருங்களத்தூர்திருமூலரின் திருமந்திரத்தில் உள்ள காப்புச் செய்யுள் இது. சிவனுக்கு நந்தி என்ற பெயரும் உண்டு. 'நந்தி மகன்தனை' என்பதற்கு சிவனின் மகன் என்று பொருள். சிலாதமுனிவர் தன் மகனுக்கு சிவனின் பெயர்களில் ஒன்றான 'நந்தி' என்று பெயரிட்டார். தவவாழ்வில் ஈடுபட்ட நந்திக்கு சிவகணங்களின் தலைவராகும் பாக்கியம் கிடைத்தது. நந்தீஸ்வரர் என்ற சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு. திருமந்திரத்தில் பல பாடல்களில் 'நந்தி' என்ற பெயரால் சிவன் குறிப்பிடப்படுகிறார். * ஜாதகத்திலுள்ள தோஷம் ஆயுள்காலம் வரை நீடிக்குமா?எம்.எஸ்.சேகர், கோவைஜாதகம் பற்றி ரொம்பவே கவலைப்படுகிறீர்கள் என்று தெரிகிறது. தோஷம் என்பது குறிப்பிட்ட திசை, புத்தி காலத்தில் மட்டுமே வேலை செய்யும். அதற்குரிய பரிகாரத்தை அந்த சமயத்தில் செய்து விட்டால் போதும். கஷ்டம் குறையும். தெய்வ வழிபாட்டில் முழுமையாக ஈடுபாடு கொண்டவர்கள் ஜாதகம் பற்றி கவலைப்படுவதே இல்லை என்பதே நடைமுறை உண்மை. * கோயிலுக்கு சனீஸ்வரர் சிலை வாங்கித் தர முடிவு செய்துள்ளோம். இதற்கான பலன் என்ன?ரங்காச்சாரி, புதுச்சேரி சனீஸ்வரரே ஆயுள்காரகர் மற்றும் ஜீவனகாரகராக இருக்கிறார். அதாவது ஆயுள், தொழில் இரண்டுக்கும் அதிகாரி அவரே. இவர் அருளால் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆயுள், தொழில் விருத்தி உண்டாகும். நேர்மையான எண்ணங்கள் அதிகரிக்கும். சனிக்குரிய தெய்வமான சாஸ்தாவின் அருளும் கிடைக்கும். * நமசிவாய, நமச்சிவாய என வெவ்வேறு விதமாகச் சொல்கிறார்கள். இதில் எது சரி?பி.முகுந்தன், சென்னைதமிழ் மரபுப்படி 'நமச்சிவாய' என்பது சரி. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தேவார, திருவாசக பாடல்களில் நமச்சிவாய என்றே குறிப்பிட்டுள்ளனர்.சிவபுராணத்தில் 'நமச்சிவாய வாழ்க' என்று தொடங்குவதைக் காணலாம். வடமொழி இலக்கணப்படி, 'நமசிவாய' என்று சொல்கிறார்கள். இரண்டுமே சரி தான்!