மனப்பாடப்பகுதி
UPDATED : ஆக 10, 2018 | ADDED : ஆக 10, 2018
திரு ஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியேதிருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியேபெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியேவண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியேபொருள்: ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாளே வாழ்க! திருப்பாவை என்னும் முப்பது பாசுரம் பாடியவளே வாழ்க! பெரியாழ்வாரின் மகளாக வந்தவளே வாழ்க! ஸ்ரீவில்லிபுத்துார் நகருக்கு பெருமை சேர்க்கும் கோதை ஆண்டாளே! உன் மலர்ப்பாதம் என்றென்றும் வாழ்க.