உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய்! உலகுதன்னை வாழ நின்ற நம்பீ! தாமோதரா! சதிரா! என்னையும் என்னுடைமையையும் உன் சக்கர பொறி யொற்றிக் கொண்டுநின்னருளே புரிந்திருந்தேன் இனியென் திருக்குறிப்பே.பொருள்: விண்ணுயர்ந்த குளிர்ந்த திருவேங்கட மலையில் வாழ்பவனே! உலகத்தை வாழ்விப்பவனே! தாமோதரனே! குற்றம் பொறுப்பவனே! என் உயிரிலும், உடம்பிலும் சக்கர சின்னத்தை இட்டுக் கொண்டு, உன் அருளையே நம்பி வாழ்கிறேன்.