உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.பொருள்: இறைவா! நீயே வானம், மண், காற்று, ஒளியாக இருக்கிறாய். உடலாகவும், உயிராகவும் விளங்குகிறாய். எங்கும் நிறைந்தவனாகவும், இல்லாதவனாகவும் திகழ்கிறாய். உலகின் தலைவனாக இருப்பவனும் நீயே! நான், எனது என்னும் நினைப்பைத் தந்து உயிர்களை ஆட்டுவிப்பவனே! உன் அருமை பெருமைகளை எப்படி எடுத்துச் சொல்லி வாழ்த்துவேன்!