மனப்பாடப்பகுதி
UPDATED : பிப் 07, 2020 | ADDED : பிப் 07, 2020
கையால் உனைத் தொழச் சென்னியினால் உன் கழல் வணங்க மெய்யா அடிக்கடி வாக்கால் துதிக்க விதித்து மனம் நையா இயற்கை நல்கி இனி என்னை நழுவ விடேல் ஐயா உனக்கு அபயம் பழனாபுரி ஆண்டவனே பொருள்: பழநி முருகனை கை குவித்து வணங்குகிறேன். தலையால் உன் திருவடிகளைச் சரணடைகிறேன். உன் திருப்பெயரை இடைவிடாது ஜபிக்கிறேன். என் மனம் குளிரும் வகையில் நல்ல நிலையை வழங்க வேண்டுகிறேன். பழநியில் இருக்கும் முருகனே! உன்னிடம் அடைக்கலம் அடைந்த என்னை கைவிடாமல் காப்பாயாக.