உள்ளூர் செய்திகள்

பிரசாதம் இது பிரமாதம்: குழிப்பணியாரம் இனிப்பு

என்ன தேவைபச்சரிசி - 200 கிராம்புழுங்கலரிசி - 200 கிராம்உளுந்தம் பருப்பு - 50 கிராம்வெந்தயம் - 1 டீஸ்பூன்வெல்லம் - 150 கிராம்உப்பு - 1/2 டீஸ்பூன்தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய் - 100 கிராம்எப்படி செய்வதுஅரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயத்தை ஊற வைத்து முதல் நாள் இரவு அரைத்து உப்பு சேர்த்து இட்லி மாவு போல் கரைத்து வைக்கவும். மறுநாள் காலை வெல்லத்தைத் துாள் செய்து ஒரு கை தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி மாவுடன் சேர்க்கவும். தேங்காய்த் துருவலையும் அத்துடன் சேர்க்கவும். குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு குழியிலும் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் முக்கால் குழிக்கு மாவை ஊற்றவும். இரண்டு நிமிடம் கழித்து கம்பியால் பணியாரத்தைக் குத்தித் திருப்பி விட்டு சிறிது நேரம் கழித்து எடுத்தால் சுவையான குழிப்பணியாரம் ரெடி.