உள்ளூர் செய்திகள்

பிரசாதம் இது பிரமாதம் - எள்ளு சாதம்

தேவையானவை * உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப் * காய்ந்த மிளகாய் - 2 * பெருங்காயத்துாள் - அரை டீஸ்பூன் * கறுப்பு எள் - கால் கப் * வெள்ளை எள் - 4 டேபிள்ஸ்பூன் * கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு* நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்* உப்பு - தேவைக்கேற்பசெய்முறை: வெறும் வாணலியில் கறுப்பு, வெள்ளை எள்ளை சிவக்க வறுக்கவும். ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்யில் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை வறுத்து, எள்ளுடன் சேர்த்து மிக்சியில் பொடிக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள எண்ணெய்யை ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து அடுப்பை அணைத்து விடவும். சாதம், எள்ளுப்பொடி இவற்றை தாளித்த பொருட்களுடன் சேர்த்து கலக்கவும். இதை சனிக்கிழமைகளில் சனி பகவானுக்குப் பிரசாதமாக படைப்பர்.