உள்ளூர் செய்திகள்

அர்ச்சனைப் பூக்கள்

அர்ச்சனைப் பூக்கள் இந்த வார ஸ்லோகம் ப்ரம்மா ச விஷ்ணுஸ்ச்ச ஸ்ரீஸ்ச்ச வாணீ கௌரீ ச லக்ஷ்மீஸ்ச விநாயகஸ்ச்ச ஸ்கந்தஸ்ச்ச தேவா: ரிஷியஸ்ச்ச ஸர்வே குர்வந்து ஸர்வே மம மங்களானி பொருள்: பிரம்மாவும், விஷ்ணுவும், சிவனும், சரஸ்வதியும், பார்வதியும், லட்சுமியும், விநாயகரும், முருகப்பெருமானும், எல்லா தேவர்களும், மகரிஷிகளும் எனக்கு சுபமங்களத்தை அருள்செய்யட்டும்.மனபபாடப்பகுதி உனக்குப் பணிசெய்ய உன்றனை எந்நாளும் நினைக்க வரம் எனக்கு நீ தா- மனக்கவலை நீக்குகின்ற தென்மதுரை நின்மலனே எவ்வுலகும் ஆக்குகின்ற சொக்கநா தா. பொருள்: மனக்கவலையைப் போக்குகின்ற தென் மதுரையாகிய ஆலவாய்நகரில் வீற்றிருக்கும் சிவனே! அனைத்து உலகங்களையும் படைத்த சொக்கநாதனே! உனக்கு பணிசெய்யவும், உன் திருவடியை எந்நாளும் மறவாமல் இருக்கவும் எனக்கு வரம் அருள்வாயாக. குறிப்பு: இந்தப் பாடலைக் குருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.