உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. அழுகையால் சிவனின் அன்பைப் பெற்ற அடியவர் ............. மாணிக்கவாசகர்2. என் கடன் பணி செய்து கிடப்பதே என தொண்டாற்றியவர்..........திருநாவுக்கரசர் 3. கடை விரித்தேன் கொள்வார் இல்லை என வருந்தியவர்.....வள்ளலார் 4. எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என விரும்பியவர்.....தாயுமானவர் 5. பெருமாளின் அருளை நினைத்து அழும் குழந்தையாக இருந்தவர்.....குலசேகராழ்வார் 6. முருகனின் அழகைக் காண பிரம்மாவிடம் நாலாயிரம் கண்கள் கேட்டவர்......அருணகிரிநாதர்7. அரங்கன் இல்லாமல் இந்திர லோக வாழ்வு வேண்டாம் என மறுத்தவர்.......தொண்டரடிப் பொடியாழ்வார் 8. சிவநாமம் எங்கும் சூழ வேண்டும் என பாடியவர்.........ஞானசம்பந்தர் 9. கண்ணனை நினைத்து உருகி வாரணம் ஆயிரம் பாடியவள்......ஆண்டாள் 10. யசோதையாக மாறி கண்ணனைத் தாலாட்டியவர் ........பெரியாழ்வார்