சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
* கல்வி, கலைகளில் சிறக்க அருள்புரிபவர் வித்யா கணபதி.* விநாயக புராணத்தின் ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார்.* கபில முனிவர் விநாயகர் மீது பாடியது காரியசித்தி மாலை.* உணவில் விருப்பம் மிக்கவர் என்பதால் விநாயகரை போஜன பிரியர் என்பர்.* விநாயகரின் மகளாக கருதப்படுபவர் சந்தோஷி மாதா.* விநாயகரின் சின்னமாக கருதப்படுவது 'ஸ்வஸ்திக்'.* மக்களிடம் நாட்டுப்பற்று வளர விநாயகரை வழிபட்ட தேசத்தலைவர் பாலகங்காதர திலகர்.* சித்தி, புத்தி என்னும் இருவரை மணந்தவர் விநாயகர்.* புதுச்சேரி மணக்குள விநாயகரை வழிபட்ட புலவர் பாரதியார்.* விநாயகரின் இருப்பிடம் ஆனந்த லோகம்.* விநாயகருக்கு கணபதி என்றும் பெயருண்டு. 'க' என்ற எழுத்து ஞானம், 'ண' என்பது மோட்சம், 'பதி' என்பது தலைவன் என்பதையும் குறிக்கும். * முதன்முதலில் விநாயகருக்கு தோப்புக்கரணமிட்ட முனிவர் அகத்தியர். * ஜாதகத்தில் கேது புத்தி, திசை நடப்பில் உள்ளவர்கள் விநாயகரை வழிபடுவது நல்லது. * 'ஓம் கம் கணேசாய நம' என 108 முறை ஜபிக்க விநாயகரின் அருள் கிடைக்கும். * ஆறு ஆதாரங்களில் விநாயகருக்கு உரியது மூலாதாரம்.* புகழ் மிக்க எட்டு விநாயகர் கோயில்கள் மகாராஷ்டிராவிலுள்ள புனே நகரைச் சுற்றியுள்ளன. * அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் விநாயகர் அருளால் நோய், பிறவிப்பிணி தீரும். * விநாயகர் சதுர்த்தியன்று களிமண்ணால் ஆன விநாயகரை வழிபடுவது சிறப்பு. * இலங்கை, பர்மா, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளில் விநாயகர் வழிபாடு உள்ளது. * சதுர்த்தி விரதமிருந்ததன் பலனாக பார்வதி சிவபெருமானை மணந்தாள். * பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4:30 - காலை 6:00 மணிக்குள் கணபதி ேஹாமம் செய்வது சிறப்பு.