சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
* நமது துக்கங்களை எல்லாம் கடக்க வைக்கக்கூடியது ராம நாமம். அதை 'தாரக நாமம்' என்று சொல்வர். * தசரதர் தனக்கு குழந்தை பிறந்தவுடன் என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தார். அவரது நினைவிற்கு வந்த பெயரே ராமர். இதற்கு துன்பங்களை நீக்கி ஆனந்தத்தை கொடுப்பவர் என்று பொருள். * ராம நாமம் என்பது உலகம் தோன்றிய காலம் முதல் வேத உபநிஷத்தில் உள்ளது. * ராமபிரான் இலங்கைக்குச் செல்ல பாலம் கட்டி கடலைக் கடந்தார். ஆனால் ராம நாமம் சொன்ன, அனுமனோ விண்ணில் தாவி கடலைக் கடந்தார்.* எல்லா சகஸ்ரநாமங்களுக்கும் ஆதியானது விஷ்ணு சகஸ்ரநாமம். அப்படிப்பட்ட நாமாவளியை சொன்ன பலன், மூன்று முறை ராம நாமத்தை ஜபித்தாலே கிடைத்துவிடும். * காசியில் இறக்கும் ஜீவன்களுக்கு, 'ராம ராம ராம' என்ற நாமத்தை உபதேசித்து முக்தி அளிப்பார் சிவபெருமான்.* அழிவில்லாத ஸ்வரூபமான ராமபிரானையும், அவன் நாமாவையும் சொல்லி அழிவில்லாத ஆனந்தத்தை அடைவோம் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். * ராம நாமம் மட்டுமே எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மூல மந்திரமாகும் என சொல்கிறார் கம்பர்.