உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* அத்தி, அரசு, புரசு, கருங்காலி போன்ற மரங்கள் அல்லாத, மற்ற மரத்தால் செய்யப்பட்ட மரக்கரண்டியால் நெய் முதலானவற்றை எடுத்து அக்னியில் ஹோமம் செய்யக்கூடாது. * ஒருவர் சகல சுகபோகங்களை அனுபவிக்கிறார். மற்றொருவர் இது எல்லாம் இருந்தும் அற்பமாக எண்ணுகிறார். இதில் இரண்டாவது நபரே உயர்ந்தவர். * கையில் குழந்தை வைத்திருப்பவர், மந்திரங்களை ஜபம் செய்பவர், நீரில் நிற்பவர்களை பார்த்து நமஸ்காரம் செய்யக் கூடாது. * நோயால் கஷ்டப்படுவோருக்கு எவ்வளவு பணம் இருந்தும் பயன் இல்லை. எனவே தர்மம் செய்து புண்ணியம் சம்பாதிக்க வேண்டும். * என்னதான் தான, தர்மம் செய்தாலும் தாய், தந்தையர்களை நல்லபடியாக கவனிக்காவிட்டால் நரகமே கிடைக்கும். * ஆயுளையும், சுகத்தையும் விரும்புகிறவர்கள் தயிர்சாதம், பால் சாதம் சாப்பிட வேண்டும். சாப்பிட்டதும் உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது. * காயத்ரி, இஷ்ட மந்திரத்தை குறைந்தது 27 தடவைகளாவது ஜபிக்க வேண்டும். * மந்திரங்களை வாயால் உச்சரித்தால் ஒரு பங்கும், சப்தமில்லாமல் ஜபித்தால் பத்து பங்கும், உதடுகளை அசைத்து ஜபித்தால் நுாறு பங்கும், மனதிற்குள்ளேயே சொன்னால் ஆயிரம் பங்கும் பலனும் கிடைக்கும்.