உள்ளூர் செய்திகள்

கீதை காட்டும் பாதை

ஸ்லோகம்தத்புத்த யஸ்த தாத்மாநஸ் தந்நிஷ்டாஸ் தத்பராயணா:!கச்சந்த்ய புநராவ் ருத்திம் ஜ்ஞாநநிர் துாதகல்மஷா:!!வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி!ஸுநீ சைவ ஸ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஸிந:!!பொருள்: யாருடைய மனம் எப்போதும் கடவுள் சிந்தனையில் ஈடுபடுகிறதோ அவர்கள் ஞானம் அடைந்தவர்களாகவும், பாவம் இல்லாதவர்களாகவும் இருப்பர். அவர்கள் மீண்டும் பூமியில் பிறவி எடுக்காத முத்திநிலையை அடைவர். இத்தகையவர்கள் ஞானிகளாக இருப்பதால் எல்லா உயிர்களையும் சமமாகவே கருதுவர். கல்வியறிவும், பணிவும் கொண்ட அந்தணர், பசுக்கள், யானை, நாய், சண்டாளன் என்று எல்லா உயிர்களும் அவர்களுக்கு ஒன்றே. அதாவது உயிர்களில் எல்லாம் ஆத்மா வடிவில் இருக்கும் கடவுள் ஒருவரே என்பதை உணர்ந்திருப்பர்.