உள்ளூர் செய்திகள்

கீதை காட்டும் பாதை

ஸ்லோகம்:ஸத்த்வம் ரஜஸ்தம இதி குணா ப்ரக்ருதி ஸம்பவா:!நிபத் நந்தி மஹாபாஹோ தேஹே தேஹிந மவ்யயம்!!தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸ கமநாமயம்!ஸுக ஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக!!ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணா ஸங்க ஸமுத்பவம்!தந்நிபத் நாதி கெளந்தேய கர்மஸங்கேந தேஹிநம்!!பொருள்: அர்ஜுனா! சத்வ, ரஜோ, தமோ என்னும் மூன்று குணங்கள் இயற்கையில் இருந்து தோன்றியவை. அவையே அழிவு இல்லாத ஜீவாத்மாவை உடலில் கட்டுகிறது. இதில் சத்வ குணம் துாய்மையானது. ஒளி மிக்கது. மாற்றம் இல்லாதது. இதுவே ஞான வழியில் செல்ல மனிதனை துாண்டுகிறது. விருப்பத்தின் வடிவமான ரஜோ குணம் ஆசை, பற்றில் இருந்து உண்டாகிறது. செயலிலும், அதனால் கிடைக்கும் பலனிலும் ஒருவனை இதுவே ஈடுபடுத்துகிறது.