கீதை காட்டும் பாதை
UPDATED : மே 16, 2020 | ADDED : மே 16, 2020
ஸ்லோகம்:யே த்வக்ஷரமநிர்தே ஸ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே!ஸர்வத்ரக மசிந்த்யம் ச கூடஸ்த மசலம் த்ருவம்!!ஸந்நியம்யேந்த் ரியக் ராமம் ஸர்வத்ர ஸமபுத்தய:!தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா:!!பொருள்: பரம்பொருளின் இயல்பைச் சொற்களால் விளக்க முடியாது. மனம், புத்திக்கு எட்டாத அது என்றும் மாறாத தன்மை கொண்டது. அதற்கு உருவம், அசைவு, இயக்கம், அழிவு என்பதே கிடையாது. சச்சிதானந்தமான அந்த உயர்ந்த பொருளை மனம் ஒன்றி தியானிக்கும் யோகிகள் உயிர்களின் நன்மைக்காக தங்களின் வாழ்வை அர்ப்பணித்து இறுதியில் என்னை வந்தடைகின்றனர்.