கீதை காட்டும் பாதை
UPDATED : ஜூலை 11, 2020 | ADDED : ஜூலை 11, 2020
ஸ்லோகம்த்யக்த்வா கர்ம பலாஸங்கம் நித்யத்ருப்தோ நிராஸ்ரய:!கர்மண்யபி ப்ரவ்ருத்தோபி நைவ கிஞ்சித் கரோதி ஸ:!!நிராஸீர்யத சித்தாத்மா த்யக்த ஸர்வ பரிக்ரஹ:!ஸாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்!!பொருள்: செயல்களால் ஏற்படும் பலனில் விருப்பம் இல்லாதவன், உலக விஷயங்களில் நாட்டம் இல்லாதவன், கடவுளைச் சிந்திப்பதில் திருப்தி காண்பவன் ஆகியோர் கர்ம வாழ்வில் உழன்றாலும் அதில் சிறிதும் ஈடுபட மாட்டார்கள். மனம், கண்,காது, மூக்கு, நாக்கு, மெய் என்னும் ஐம்புலன்கள் அடங்கிய இந்த உடலை வெற்றி கொண்டு சுகபோக வாழ்வைத் துறப்பதால் பாவமும் அவர்களைத் தீண்டாது.