உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

ஜன.31, தை 17: சஷ்டி விரதம், திருப்பரங்குன்றம் முருகன் சைவ சமய ஸ்தாபித லீலை, இரவு மயில் வாகனம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெள்ளி சிம்மாசனம், திருச்சேறை சாரதநாதர் உற்ஸவம் ஆரம்பம், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் பவனி, திருப்புடைமருதுார் சிவன், அம்மன் கற்பக விருட்சம், கமல வாகனம், கலிக்கம்ப நாயனார் குருபூஜை, கரிநாள். பிப்.1, தை 18: ரதசப்தமி, சூரிய சந்திர விரதம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க குதிரை வாகனம், திருப்பரங்குன்றம் முருகன் ரத்ன சிம்மாசனம், கோவை பால தண்டாயுதபாணி உற்ஸவம் ஆரம்பம், திருச்சேறை சாரநாதர் சூரிய பிரபையில் வேணுகோபால திருக்கோலம், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கருட வாகனம், பைம்பொழில் சிவன் கோரதம், நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை.பிப்.2, தை 19: பீஷ்மாஷ்டமி, பீஷ்ம தர்ப்பணம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷப வாகனத்தில் சைவ சமய ஸ்தாபித லீலை, திருப்பரங்குன்றம் முருகன் பச்சை குதிரை வாகனம், கோவை பாலதண்டாயுதபாணி சூரிய பிரபை, திருச்சேறை சாரநாதர் பரமபத நாதர் திருக்கோலம், திருநெல்வேலி நெல்லையப்பர் நெல்லுக்கு வேலி கட்டிய லீலை.பிப்.3, தை 20: தை கார்த்திகை, திருப்பரங்குன்றம் முருகன் சின்ன வைரத்தேர், இரவு மயில் வாகனம், திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம், கோவை பால தண்டாயுதபாணி சந்திர பிரபை, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் நந்திகேஸ்வர யாளி வாகனம், பழநி முருகன் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனம்.பிப்.4, தை 21: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தந்த பல்லக்கு, குதிரை வாகனம், மச்சகந்தியார் திருமணக்காட்சி, திருப்பரங்குன்றம் முருகன் தெப்பம், இரவு சூரசம்ஹார லீலை, திருச்சேறை சாரநாதர் ராமர் திருக்கோலத்தில் அனுமன் வாகனம், கோவை பாலதண்டாயுதபாணி யானை வாகனம், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் பவனி.பிப்.5, தை 22: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாணம், இரவு ராஜாங்க அலங்காரம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சப்தாவர்ணம், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர், கோவை பாலதண்டாயுதபாணி அன்ன வாகனம், பழநி முருகன் வெள்ளிக் கேடயம்.பிப். 6, தை 23: வராக துவாதசி, பிரதோஷம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷப வாகனம், திருச்சேறை சாரநாதர் சூர்ணாபிேஷகம், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் வீதியுலா, கோவை பால தண்டாயுதபாணி மயில் வாகனம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி, அரிவாட்ட நாயனார் குருபூஜை.