இந்த வாரம் என்ன
ஜூலை 10, ஆனி 26: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை, சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.ஜூலை 11, ஆனி 27: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம், குச்சனுார் சனீஸ்வரர் ஆராதனை, அகோபிலமடம் 23வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்ஜூலை 12, ஆனி 28: முகூர்த்தநாள், கலிக்கம்ப நாயனார் குருபூஜை, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் அனுமன் திருமஞ்சனம், கண்ணுாறு கழிக்க, மா, பலா, புளிக்கன்று வைக்க நல்ல நாள்ஜூலை 13, ஆனி 29: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் மூலவர் திருமஞ்சனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், சந்திர வழிபாட்டு நாள், சந்திரபகவானுக்கு வெள்ளை மலர்கள் சாத்தி வழிபடுதல்ஜூலை 14, ஆனி 30: ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் சேதுமாதவ சன்னதிக்கு விநாயகருடன் எழுந்தருளி பூஜை, சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்ஜூலை 15, ஆனி 31: திருப்போரூர் முருகப்பெருமான் சிறப்பு அபிஷேகம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்ஜூலை 16, ஆடி 1: தட்சிணாயன புண்ணிய காலம், ஆடிமாதப்பிறப்பு, ஏகாதசி, கார்த்திகை விரதம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சிறப்பு வழிபாடு, நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் மகாலட்சுமி அலங்காரம்