இந்த வாரம் என்ன
ஏப்.28 சித்திரை 15: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சைவ சமய வரலாறு ஸ்தாபித்த லீலை. சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. திருத்தணியில் சிவபெருமான் காலை பல்லாக்கிலும், இரவு வெள்ளி நாக வாகனத்திலும் திருவீதியுலா. சிவஞான முனிவர் குருபூஜை. ஏப்.29 சித்திரை 16: சோளசிம்மபுரம் லட்சுமிநரசிம்மர் காலை சூரியபிரபையிலும் இரவு சந்திர பிரபையிலும் பவனி. கள்ளக்குறிச்சி கலியப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம். ஏப்.30 சித்திரை 17: திருச்சி,சீர்காழி சிவன் கோயில்களில் திருக்கல்யாணம். ராமநாதபுரம் உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி காலை பல்லாக்கு, இரவு காமதேனு வாகனத்தில் புறப்பாடு. மே 1 சித்திரை 18: திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் காலை வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சியருளல். துாத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோயில் நடராஜர் பச்சை சாற்றி புறப்பாடு. மே 2 சித்திரை 19 : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். திருத்தணி முருகப்பெருமான் காலை யாளி வாகனத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் பவனி. வீரபாண்டி கவுமாரியம்மன் வீதி உலா. மே 3 சித்திரை 20: பிரதோஷம். அழகர்கோயில் கள்ளழகர் கோயிலில் இருந்து புறப்பாடு. கல்லிடைக்குறிச்சி கலியப்பெருமாள் கருட சேவை. கடையம், இலஞ்சி, திருப்பனந்தாள், சீர்காழி, திருவையாறு, திருக்கடவூர் தலங்களில் தேர். உமாபதி சிவாச்சாரியார் குருபூஜை மே 4 சித்திரை 21: முகூர்த்த நாள், நரசிம்ம ஜெயந்தி, அழகர் கோயில் கள்ளழகர் தல்லாகுளத்தில் எதிர்சேவை காண்பித்தருளல். சென்னை கேசவப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம். ஆறுமுகமங்கலம் ஆயிரத்தொன்று விநாயகர் கோயிலில் உற்ஸவம் முடிவு. இசைஞானியார் குருபூஜை. மதுரகவியாழ்வார் திருநட்சத்திரம். அக்னி நட்சத்திரம் ஆரம்பம். இன்று செடி, கொடிகள் வைக்க நன்று.