உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

அக்.20 ஐப்பசி 3: முகூர்த்த நாள். சரஸ்வதி ஆவாஹணம். குலசேகரபட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் மஹிஸாசுரமர்த்தினியாக காட்சி. இன்று கிழங்குவகை பயிரிட நன்று.அக்.21 ஐப்பசி 4: திருநள்ளாறு, குச்சனுார், இலத்துார் தலங்களில் சனீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு. திருகுறுகைப்பிரான், சேனை முதலியார் திருநட்சத்திரம். அக்.22 ஐப்பசி 5: திருவோண விரதம்.உத்திர மாயூரம் சந்திரசேகரர் புறப்பாடு. அக்.23 ஐப்பசி 6: சகல கோயில்களிலும் சரஸ்வதி, ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு. (நல்ல நேரம் காலை 9:30 - 10:30 மணி) பொய்கையாழ்வார் திருநட்சத்திரம். அக்.24 ஐப்பசி 7: விஜயதசமி, குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வித்யாரம்பம் செய்ய ஏற்றநாள். பூதத்தாழ்வார் திருநட்சத்திரம். குலசேகரபட்டினத்தில் தசரா. கன்னியாகுமரி அம்மன் பாரி வேட்டை, ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம். கரிநாள்.அக்.25 ஐப்பசி 8: முகூர்த்த நாள். ஸ்ரீவில்லிபுத்துார் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். பேயாழ்வார் திருநட்சத்திரம். கொலுவை எடுத்து வைக்க நேரம் (காலை 9:00 - 10:30 மணி) தென்னை, பலா, மா, புளி வைக்க நன்று. அக்.26 ஐப்பசி 9: பிரதோஷம். சகல சிவன்கோயில்களிலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் நுாபுர கங்கையில் எண்ணெய் காப்பு உற்ஸவம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.