உள்ளூர் செய்திகள்

விடை தருகிறார் ஆதிசங்கரர்

பக்தியோடு நாம் எதைக் கேட்டாலும் பகவான் கொடுப்பார். ஆனால் பலரும், 'எனக்கு வேலை வேண்டும், உடல் நலம் சரியாக வேண்டும், குழந்தைகளுக்கு திருமணம் ஆக வேண்டும்' என வேண்டுதலை வைக்கின்றனர். இந்த உலகை இயக்குபவருக்கு, நம் தேவைகள் என்னவென்பது தெரியாதா? சரி. என்னதான் அவரிடம் கேட்பது? என கேள்வி எழுகிறதா... அதற்கு விடை தருகிறார் ஆதிசங்கரர்.1.கர்வம்: எந்த செயலை செய்தாலும், அது 'என்னால் முடிகிறது. நான் செய்கிறேன்' என நினைக்கிறோம். முதலில் அந்த 'தான்' என்ற அகங்காரம் வரக்கூடாது என வேண்டுங்கள். 2. ஆசை: எப்போதும் மனதில் ஆசைகள் இருந்து கொண்டே இருக்கும். இதனால் துன்பமே வரும். எனவே ஆசைகளை குறைக்கும் மனதை கேளுங்கள்.3. திருப்தி: உலகிலேயே உயர்ந்தது திருப்தியான மனநிலை. ஆம்! பகவான் கொடுத்ததை வைத்து வாழ்வது நல்ல விஷயம். அந்த மனநிலை நமக்கும் வந்தால் எப்படி இருக்கும். 4. இரக்கம்: இந்த குணம் நம்மிடம் இருந்தால் கோபமே வராது. யார் தவறு செய்திருந்தாலும், அவர் தெரியாமல் செய்திருப்பர் என நினைப்போம். எனவே இந்த இரக்க குணத்தை வேண்டுங்கள். 5. மோட்சம்: நாம் வாழ்வது எத்தனையாவது பிறவி என தெரியாது. அந்த அளவிற்கு பிறப்பு, இறப்பு என்னும் பிறவிச்சுழலில் சுழன்று கொண்டிருக்கிறோம். இதில் இருந்து வெளியேற மோட்சத்தை தர வேண்டுவோம்.