தங்கக்காசு
ஒருமுறை தஞ்சாவூரில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். அப்போது சுமங்கலி பூஜை நடத்த ஏற்பாடானது. மஹாபெரியவரின் அருள் பெற வேண்டும் என பல பெண்கள் அதில் கலந்து கொண்டனர். பூஜை முடிந்ததும் ஒவ்வொருவருக்கும் காமாட்சி திருவுருவம் பொறித்த தங்கக்காசு ஒன்றை மஹாபெரியவர் வழங்கினார். சுவாமிகளின் தரிசனமே பரவசம் தரக் கூடியது. அதுவும் அவர் கையால் தங்கக்காசு கொடுத்து ஆசி தருகிறார் என்றால் சாதாரண விஷயமா...வரிசையில் வந்த ஒரு பெண் சுவாமிகளை வணங்கி விட்டு, முந்தானைத் தலைப்பை பிடித்தபடி நின்றாள். அடுத்த விநாடி சுவாமிகளின் கையில் இருந்து காசு விழுந்தது. முந்தானையை பிடித்தபடி கவனமாக நடந்தாள். ஓரத்தில் நின்று காசை கண்களில் ஒற்றிக் கொள்ள எடுத்த போது பிரமித்துப் போனாள். முந்தானையில் இரண்டு காசுகள் இருந்தன. ' எல்லோருக்கும் பெரியவா ஒரு காசு தானே கொடுத்தார்? எனக்கு மட்டும் எப்படி இரண்டு காசு வந்தது' என யோசித்தாள். அதை ஒப்படைக்க ஓடினாள். 'பெரியவா... எனக்கு மட்டும் ரெண்டு காசு இருக்கே. அதான் அந்தக் காசை...' என இழுத்தாள். புன்னகைத்தபடி, 'உன் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு இந்த காசுகள்' என்றார் சுவாமிகள். அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவர் சொல்லித்தான் கரு உண்டான விஷயம் அவளுக்கு தெரியும். அதை சுவாமிகளும் சொல்கிறாரே என நெகிழ்ச்சி அடைந்தாள். உரிய காலத்தில் சுகப்பிரசவம் நடந்தது. சுவாமிகள் சொன்னது போல அவளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். அவர்களின் பெயர் கணேசன், சுப்பிரமணியன். கருவில் இருக்கும் போதே காஞ்சி மஹாபெரியவரிடம் ஆசி பெற்ற குழந்தைகள் அல்லவா அவர்கள்.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* ஏகாதசி விரதம் இருந்தால் பாவம் தீரும். * குழந்தைப்பேறுக்கு வியாழன் அன்று விரதம் இரு.* நினைத்தது நிறைவேற 'ஸ்ரீராமஜெயம்' எழுதுங்கள். * மனவலிமைக்கு பவுர்ணமி அன்று கிரிவலம் செல்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!! -நாராயணீயம்எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com