உள்ளூர் செய்திகள்

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 32

சங்கடங்கள் நீக்கும் சங்கடஹர கணபதிசங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லை, இன்னல், சிக்கல் என்று பொருள். சங்கடங்களை நீக்குபவர் இந்த கணபதி.தியான சுலோகம்பாலார்காருண காந்திர் வாமே பாலாம் வஹந் நங்கே லஸதிந்தீவர ஹஸ்தாம் கௌராங்கீம் ரத்த சோபாட்யாம்| தக்ஷேங்குச வரதாநம் வாமே பாசஞ்ச பாயஸம் பாத்ரம் நீலாம்சுக லஸமாந: பீடே பத்மாருணே திஷ்டந்- ஸங்கடஹரணப் பாயாத் ஸங்கடபூகாத் கஜாநநோ நித்யம்IIபாலார்க - இளஞ்சூரியன் போன்றுஅருண காந்தி: - ஒளிரும் சிவந்த நிறத்தவரும்வாமே - இடதுபக்கத்துஅங்கே - மடி மீதுலஸத் - பிரகாசிக்கின்றஇந்தீவரம் - கருங்குவளைப் பூவை (நீலோத்பலத்தை)ஹஸ்தாம் - தனது கையில் ஏந்தியவளாயும்கௌராங்கீம் - வெண்ணிறத்தவளாயும்ரத்ன சோபாட்யாம் - ரத்தினங்களின் ஒளியுடன் விளங்குபவளாயும் இருக்கின்றபாலாம் - இளந்தேவியைவஹன் - தாங்கியிருப்பவராக (இவரது)தக்ஷே - வலதுபக்க (இரு கைகளில்)அங்குச - அங்குசம் எனும் ஆயுதத்தையும்வரதாநம் - வரத முத்திரையையும்வாமே - இடதுபக்க (இரு கைகளில்)பாசம் - பாசம் எனும் ஆயுதத்தையும்ச - இவற்றோடுபாயஸ பாத்ரம் - பாயச பாத்திரத்தையும் (ஏந்தியிருப்பவரும்)நீலாம்சுக: - நீலநிறப் பட்டாடையை அணிந்தவரும்லஸமாந: - நன்கு பிரகாசிப்பவரும்பத்மாருணே - செந்தாமரை வடிவமானபீடே - இருக்கையில்திஷ்டந் - நின்ற நிலையில் இருப்பவருமானஸங்கடஹரண: - சங்கடத்தை நீக்குபவரானகஜாநந: - யானை முகமுடையவரான சங்கடஹர கணபதியானவர் (நம்மை) ஸங்கடபூகாத் - சங்கடங்களாகிய கூட்டத்தில் இருந்துபாயாத் - பாதுகாக்கட்டும்தேவி: விநாயகப் பெருமானின் திருவருள்.அதாவது சக்தி. இருவரும் பிரிக்க முடியாதவர்கள்.வரதம்: உயிர்கள் வேண்டும் வரங்களை அருள்பவர் கணபதி என்பதைக் குறிப்பது.அங்குசம்: புலனடக்கத்தையும் அகந்தையை ஒடுக்குவதையும் குறிப்பதுபாசம்: உயிரின் ஆணவமலக் கட்டினை அகற்றுவதைக் குறிப்பது.பாயசம்: உயிரின் பக்குவ ஞானத்தையும், இறைவனின் அருளையும் குறிக்கும்.பலன்: சங்கடங்கள் நீங்கும்; கேட்கும் வரம் கிடைக்கும்; பாதுகாப்பு ஏற்படும்.அருள் தொடரும்...வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்