உயிரின் விலை பெரிது!
UPDATED : ஜூலை 10, 2014 | ADDED : ஜூலை 10, 2014
புத்தரை பல சித்துக்கள் தெரிந்த சித்தர் ஒருவர் சந்தித்தார். அவரிடம் உயிருள்ள சிப்பி ஒன்றைக் கொடுத்து, ''இதனுள் விலை உயர்ந்த முத்து இருக்கிறது. இதைப் போன்ற முத்து உலகத்திலேயே இல்லை. லட்சம் பொற்காசுகள் மதிப்புடையது. இந்த சிப்பியை உடைத்து முத்தை வைத்துக் கொள்ளுங்கள்,'' என்றார்.அதற்கு புத்தர்,''இந்த முத்து எத்தனை லட்சம் பெறுமானம் உள்ளதாகவும் இருக்கட்டும். அதற்காக ஓர் உயிரைக் கொல்ல என்னால் முடியாது. உயிரின் விலை முத்தின் மதிப்பை விட உயர்ந்ததல்லவா! சிப்பியை நீயே வைத்துக் கொள்,'' என்று அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்.