உள்ளூர் செய்திகள்

அழகான மனைவி, அன்பான கணவன் அடைந்தலே பேரின்பமே!

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணியசாமி கோவிலில், வள்ளி மணவாள பெருமான் அருள்பாலிக்கிறார். சிறந்த வாழ்க்கைத்துணை அமைய விரும்புவோர் இவரை பூசம் நட்சத்திர நாட்கள் அல்லது செவ்வாய் கிழமைகளில் வழிபடுகிறார்கள். சிலர் விரதமிருந்து ஆறு வாரங்கள் வழிபடுவர். இங்கு அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பில், செப்.4ல், கல்யாண மஹோற்சவம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் ஆண்களுக்கு, விரைவில் திருமணம் நடைபெறவேண்டும் என பிரார்த்தித்து, வள்ளி மாலையும், பெண்களுக்கு முருகன் மாலையும் வழங்கப்படும். கல்யாணம் முடிந்ததும், வள்ளி மணவாளபெருமான் கோவில் பிரகாரத்தை சுற்றி ஆறு முறை வலம் வருவார். அப்போது, திருமண பிரார்த்தனையாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு , 'வள்ளி மணவாளா போற்றி ' என்ற மந்திரத்தை உச்சரித்தபடி வர வேண்டும். இதற்கு கட்டணம் கிடையாது. மாலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். கடந்த முறை கல்யாண மஹோற்சவத்தில் பங்கேற்று, திருமணம் கைகூடியவர்கள் செப்.3ம் தேதி வரவேண்டும். இவர்கள் வள்ளி மணவாள பெருமானுக்கு வைக்கப்படும் சீர்வரிசையை கோவிலை சுற்றி எடுத்துவந்து நன்றி செலுத்த வேண்டும். பங்கேற்க விரும்புபவர்கள் அன்னதானம், மாலை உள்ளிட்ட பொருட்களை உபயமாக வழங்கலாம். பங்கேற்க விரும்பும் பிரார்த்தனையாளர்கள், செப்.4ம் தேதி காலை 7:00 மணிக்கு வர வேண்டும்.இருப்பிடம்: சென்னை - கும்மிடிப்பூண்டி சாலையில் சிறுவாபுரி 35 கி.மீ., கோயம்பேட்டில் இருந்து தடம் எண் 533, செங்குன்றத்திலிருந்து டவுன் பஸ்கள் உள்ளன.அலை/ தொலைபேசி: 99443 09719, 044 - 2471 2173.