உள்ளூர் செய்திகள்

நடந்ததை எண்ணி வருந்தாதே

* கடந்ததைப் பற்றி வருந்தாதே, வருவது பற்றிக் கற்பனை செய்யாதே.* நமக்குத் தேவையான அனைத்தும் கடவுளிடம் உள்ளன.* நல்லவர்களின் சொற்கள் மனதிற்கு ஆறுதல் தந்து வாழ்க்கைக்கு ஒளி ஊட்டும்.* இறையருள் எப்பொழுதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நீயே உணர மறுக்கிறாய்.* உனக்கு கஷ்டம் வந்தால், அதை கடவுளிடமிருந்து கிடைத்த வரமாகவே கருது.* உன் கடமைகளை கவனமாகச் செய். பலன்களை கடவுளிடம் விட்டுவிடு.* தொடர்ந்து ஆர்வம் கொண்டிரு. முன்னேற்றம் நிச்சயம் வந்தே தீரும்.* எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ, அவ்வளவு குறைவாகப் பேசு.* ஆபத்தான வேளையில் தான் பூரண அமைதி அவசியம். * உன் எண்ணங்களில் அவநம்பிக்கை ஏற்படாமல் வெற்றி நடை போடு.* பிறருடன் சச்சரவில் ஈடுபடுவது என்பது கடவுளின் பணிக்கு எதிராக போர் தொடங்குவதாகும்.புத்தி சொல்கிறார் ஸ்ரீஅன்னை