உள்ளூர் செய்திகள்

விநாயகனே வினை தீர்ப்பவனே...

விநாயகரை தினமும் வழிபட்டால் பல நன்மைகள் உண்டு. அவற்றில் சில, * அறியாமை நீங்கினால் பிறவிச்சங்கிலியில் இருந்து விடுபடலாம். அதைக் கொடுப்பார். * குருவின் உருவில் பூமியில் தோன்றி நிலையான பொருள் எது என்பதை உணர்த்துவார். * கடைக்கண் பார்வையால் கொடிய வினைகளையும் அகற்றி ஆனந்தத்தை அளிப்பார். * தெவிட்டாத உபதேசத்தை தந்து தெளிவான ஞானத்தை புகட்டுவார். * ஐம்புலன்களை அடக்கும் வழியைக் கற்றுத்தருவார். * உண்மையை சொல்லி நல்வினை, தீவினை என்னும் இருவினைகளையும் அகற்றுவார். * ஆணவம், செயல், மாயை எனும் மூன்று மலங்களால் ஏற்படும் மயக்கத்தை போக்குவார். * பிரணவ மந்திரத்தின் துணையால் உடலில் இருக்கும் ஒன்பது வாசல்களையும், ஐம்புலங்களாகிய கதவுகளை அடைக்கும் வழியைக் காட்டுவார். * நம்மை நாமே உணரும்படி நமக்கு அருள்மழை பொழிவார். * சொல், எண்ணத்தை கடந்து மனம் ஒன்றுதல் என்னும் நிலையை தந்து, மனதை தெளிவாக இருக்கும்படி செய்வார். * இருளும் ஒளியும் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டவை என்ற உண்மையை உணர்த்துவார். * இவரது பாதங்களை சரணடைந்தால் கல்வியும், செல்வமும் கிடைக்கும். என்கிறார் அவ்வையார்