உள்ளூர் செய்திகள்

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி

* கடவுள் என்னும் முதலாளியின் கையில், தேர்ந்த கருவியாக இருங்கள். அவரிடம் தொழிலாளியாக இருந்து பணியாற்றுங்கள். * கடவுளை நம் அறிவால் அளக்க முடியாது. ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவர். * விவேகமுள்ள சிறந்த நண்பர் கடவுள் ஒருவரே.* மனத்துாய்மை பெற கடவுளைச் சரணடைந்து விடு. * கடவுளின் கண்ணுக்கு அற்பமானது எதுவுமே இல்லை.* எண்ணம் அனைத்தையும் கடவுளுக்கு காணிக்கையாக்கு.* வாழ்வில் இருந்து விலகி ஓடுவது ஆன்மிகம் ஆகாது.* பயனற்ற வறட்டு வேதாந்த வலையில் சிக்கி விடாதே.* உன்னை நீயே ஆராய்ச்சி செய்து கொண்டே இரு. * பொதுநலத்துடன் வாழ முயற்சி செய்.* கருணை உணர்வுடன் மனிதர்களுக்குத் தொண்டு செய்.* நற் செயலை செய்ய நினைத்தால் உடனடியாக செயலில் ஈடுபடு. * முழுமை பெற முயற்சிப்பதே வாழ்வின் குறிக்கோள்.* பயனில்லாத கற்பனைகளை விட்டு விடுங்கள். * செல்வம் குறித்த தற்புகழ்ச்சி மிக ஆபத்தானது.சொல்கிறார் அரவிந்தர்