உள்ளூர் செய்திகள்

தலவிருட்சங்கள் - 20

மேலக்கொடுமலுார் குமரக்கடவுள் - உடைமரம்சூரபத்மனை அழிப்பதற்காக மழு ஆயுதம்(கோடரி) தரும்படி தாயார் பார்வதியிடம் முருகப்பெருமான் வேண்டினார். அந்த கோடரியை தாங்கியபடி முருகன் இருப்பதால் கொடு மழு ஊர் என இத்தலம் பெயர் பெற்றது. தற்போது கொடுமலுார் எனப்படுகிறது. திருச்செந்துாரில் சூரனை வதம் செய்த முருகன் எழுந்தருளிய இத்தலம் மிகவும் பழமையானது. மேற்கு நோக்கியபடி சுயம்பு மூர்த்தியாக ஆறடி உயரத்தில் உடைமரத்தின் அடியில் குமரக்கடவுள்(முருகன்) இருக்கிறார். உடைமரம் குடை போல் பரந்து விரிந்து சுவாமிக்கு நிழல் தருகிறது. இதற்கு குடைவேல், ஒடைமரம், குடைவேலம், குடைமரம் என்றும் பெயருண்டு. கூர்மையான முட்களுடன் பூப்பூத்து காய் காய்க்கும் இந்த மரம், போர்கோலத்தில் உள்ள குமரக்கடவுளின் பலத்துக்கு ஒப்பாக காட்சிதருகிறது. திருமணம், குழந்தை வரம் பெறவும், கடன் பிரச்னை, எதிரி தொல்லை தீரவும் வலம் வருகின்றனர். பழங்கள், கைக்குத்தல் அரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், தேன், தினைமாவு ஆகியவற்றுடன் மஞ்சள் பூசிய உடைமரக் குச்சிகளை சுவாமிக்கு சமர்ப்பிக்கின்றனர். பிரசாதமாக தரப்படும் உடைமர இலைகளை சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும். அக்காசியா பிளானிப்ரன்ஸ் (Acacia planifrons) என்ற தாவரவியல் பெயரும் பேபேசியே குடும்பத்தை சேர்ந்ததுமான உடைமரம் பற்றி சங்க இலக்கியங்களில் உள்ளன. இதன் முள்ளை சுரையுடை வாள்முள் என்பர். இந்த முட்களை கோர்த்து அம்பாக்கி எலிகளை வேட்டையாடுவது இங்குள்ள குறவர்களின் வழக்கம். புறநானுாறு பாடல்சிறியிலை உடையின் சுரையுடை வால்முள் ஊக நுண்கோல் செறித்த அம்பின் இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம் உடையிலை நடுவனது இடைபிறர்க்கு இன்றி தாமே ஆண்ட ஏமங் காவலர்இடுதிரை மணலினும் பலரேஇருங்கடல் உடுத்த இப்பெரிய மாநிலத்தின் நடுவே உடையினது சிறிய மன்னர்கள் இடுதிரை மணலினும் பலர்உடைமரத்தின் சிறிய இலை கூட பிறருக்கு உதவுவது போல் நல்லாட்சி புரியும் மன்னர்கள் மக்களுக்கு உதவுவதாக புறநானுாறு போற்றுகிறது. பரசுராமரின் கோடரி(மழு) போல இருக்கும் உடைமரத்தின் கூர்மையான முட்கள் அம்புகளாக போரில் பயன்படுத்தப்பட்டன. கருவேல், வெள்வேல் பற்றி சித்த மருத்துவப் பாடல்களில் உள்ளன. சித்தர் அகத்தியர் பாடிய பாடல் பித்தம யக்கமறும் பேருலகின் மானிடருக்குற்ற சுரவாத மோடுங்காண் - குத்துகின்றசந்துக் குடைச்சலுடன் சர்வாங்க வாதம்போம்கொத்துலவும் வெள்வே லுக்கு.குடைவேலின் ஒரு வகையான வெல்வேல் பற்றி, ''பித்த மயக்கம், காய்ச்சல், மூட்டுவலி, வாதநோய்களை வெல்வேல் தீர்க்கும் என்கிறார் அகத்தியர். வெல்வேல் மரத்தில் இருந்து எடுக்கப்படும் தைலம் கழுத்துவலி, முழங்கால்வலியை போக்கும்.எப்படி செல்வது * பரமக்குடியில் இருந்து 22 கி.மீ.,* அபிராமத்தில் இருந்து 8 கி.மீ.,நேரம்: காலை 6:00 - இரவு 7:00 மணிதொடர்புக்கு: 98434 30230-தொடரும்ஜெ.ஜெயவெங்கடேஷ்98421 67567