உள்ளூர் செய்திகள்

பசித்திரு தனித்திரு விழித்திரு

அக்.5 - பிறந்தநாள்* பசித்திரு - கடவுளின் அருளுக்காக ஏங்கி பசி உணர்வுடன் இரு.* தனித்திரு - எப்போதும் தனிமையை நாடி மனதில் அமைதியைப் பெருக்கு.* விழித்திரு - கடவுளின் அருள் எப்போது கிடைக்குமோ என்று விழிப்புடன் காத்திரு.* எல்லா உயிர்களிலும் கடவுள் இருப்பதை அறிவதே பக்தி. * அன்பு, அறிவு, அருள் உள்ளவன் தானாகவே கடவுளின் நிலைக்கு உயர்ந்து விடுவான்.* உத்தமனின் உள்ளத்தில் கடவுள் பிரணவ ஒளியாக குடியிருக்கிறார்.* எல்லாம் கடந்தவர் கடவுள். எனவே கற்பனைக்குள்ளும் அவரை யாரும் அடக்க முடியாது. * இன்பம், துன்பம் என்னும் அனுபவங்களை உடம்பு மூலம் உயிர் பெறுகிறது. * எல்லாம் கடவுள் செயல் என்பதை உணர்ந்தால் துன்பமோ கவலையோ இல்லை.* கடவுளை அடைய தியானமே சிறந்த வழி. தியானப்பயிற்சியை அன்றாட கடமையாக கொள். * மனிதப்பிறவியை பயனுள்ளதாக்கு. எப்போதும் நற்செயல்களில் ஈடுபடு.* மனதில் ஒன்று வைத்து வெளியில் வேறொன்று பேசுபவனின் நட்பை நாடாதே.* அனைவரும் ஒருநாள் இறப்பது உறுதி. அதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என சாதிப்பாகுபாடு எதற்கு.* ஆணவம் எனும் பேய் பிடித்தால், இதயத்தில் நடனமாடும் அறிவு என்னும் கடவுளை தரிசிக்க முடியாது. * நல்லவர் மனம் நடுங்கும்படி ஒருபோதும் நடப்பது கூடாது. * தானம் கொடுக்கா விட்டாலும் தவறில்லை; ஆனால் கொடுப்பவரை தடுக்காமல் இரு.* நண்பரிடத்தில் ஒருபோதும் வஞ்சக எண்ணத்துடன் பழகாதே. வழிகாட்டுகிறார் வள்ளலார்