வாழுங்கள் வாழ விடுங்கள்!
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டுங்கள். நீங்கள் வாழ விரும்புவது போல மற்றவர்களையும் வாழ விடுங்கள். இதுவே அகிம்சை வழி.* உண்மையின் பாதையில் நடப்பவனுக்கு உபதேசம் தேவையில்லை. உண்மை உள்ளத்தூய்மைக்கு வழி வகுக்கும். அதுவே ஒழுக்கத்தின் உயிர்நாடி.* தவறுக்காக மன்னிப்பு கேட்கும் போது அன்பு செய்யும் குணம் உண்டாகும். அதன் மூலம் பயம் நீங்கி மனம் தூய்மை பெறும்.* அடக்கமாக வாழும் இல்லறத்தான், பணிவின்றி வாழும் துறவியை விட மேலானவன்.* சொல்லக் கூடாததை பிறருக்கு தெரிவித்த பின், யாருக்கும் சொல்லாதீர்கள் என்பதை விட மவுனம் காப்பது மேலானது.* ஏமாற்றுதல் என்பது சிறிய முள். அதை ஒருவரின் உள்ளத்தில் இருந்து பிடுங்கி எறிவது மிக கடினம்.* ஒளிவு மறைவு இல்லாமல் செய்ததை செய்ததாகச் சொல்லுங்கள். செய்யாததை செய்யவில்லை என மறுத்து விடுங்கள்.* நல்ல நம்பிக்கை இல்லாமல் நல்லறிவு உண்டாகாது. நல்லறிவு இல்லாமல் நல்லொழுக்கம் உண்டாகாது.சொல்கிறார் மகாவீரர்