நவராத்திரி டிபன் தயார்!
நவராத்திரி கொலு பார்க்க வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு இந்த உணவுகளை தயாரித்து அளிக்கலாமே...!மைசூரு கடுகு சாதம்தேவையான பொருட்கள்அரிசி - 100 கிராம்மிளகாய் வத்தல் - 3தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்கடுகு - அரை டீஸ்பூன்மஞ்சள் துண்டு - சிறிதளவுபுளி - சிறிதளவுநல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்பெருங்காயம் - சிறிதளவுகறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுசெய்முறை: சாதத்தை குழையாமல் பதமாக வேக வைக்கவும். தேங்காய் துருவல், மிளகாய் வத்தல், புளி, உப்பு, மஞ்சள் ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும். அதனுடன் கடுகைச் சேர்த்து கரகரப்பாய் அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதையும், பச்சைக் கறிவேப்பிலையையும் சாதத்தில் இட்டு கிளறிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்த பின், தூள் பெருங்காயம் இட்டு பொரிந்தபின், கடலைப் பருப்பை வறுத்துக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெய், பெருங்காயப் பொடி, கடலைப்பருப்பு முதலியவற்றை சாதத்தில் சேர்த்து நன்றாகக் கலந்து விட்டால் ருசிமிக்க கடுகு சாதம் ரெடி.அவல் ஜவ்வரிசி பாயாசம்தேவையான பொருட்கள்அரிசி - 100 கிராம்பால் - 500 மி.லி.,ஜவ்வரிசி - 50 கிராம்அவல் - 50 கிராம்சர்க்கரை - 500 கிராம்முந்திரிப்பருப்பு - 5ஏலக்காய் - 4செய்முறை: தண்ணீரில் ஊற வைத்த அரிசியை நிழலில் உலர்த்தவும். ஏலக்காயைப் பொடி செய்து வைக்கவும். வாணலியை சூடாக்கி உலர்ந்த அரிசியை பொன்னிறமாக வறுக்கவும். முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். வறுத்த அரிசி, ஜவ்வரிசி, அவல்,சர்க்கரை, ஏலக்காய், முந்திரி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்த கலவையை மிக்சியில் அடித்து பொடி செய்து கொள்ளவும். பாலை நன்றாக கொதிக்க வைத்து கலவையைத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் தேங்காய்ப்பாலை விரும்பினால் சிறிதளவு சேர்த்துக் கொள்வதும் உண்டு. பால் பணியாரம்தேவையான பொருட்கள்பச்சரிசி - 250 கிராம்உளுந்தம்பருப்பு - 100 கிராம்உப்பு - சிறிதளவுஎண்ணெய் - 500 மி.லி.,சர்க்கரை - 100 கிராம்தேங்காய் - 1செய்முறை: அரிசி, உளுந்தம்பருப்பை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் தண்ணீர் அளவாகச் சேர்த்து இட்லி மாவு போல கெட்டியாக ஆட்டிக் கொள்ளவும். உப்பு சேர்த்து கலக்கவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து சர்க்கரையைக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், மாவை சிறு பணியார உருண்டையாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பொரித்த பணியாரத்தை தேங்காய்ப்பாலில் போட்டு ஊற வைக்கவும். தேங்காய்ப்பாலுக்குப் பதிலாக பசும்பாலைக் காய்ச்சியும் பயன்படுத்தலாம்.