உள்ளூர் செய்திகள்

ஆன்மிக கல்வி மிக அவசியம்!

செப்.5 ஆசிரியர் தினம்* ஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை அனைவருக்கும் ஆன்மிக விஷயங்களை போதிப்பது மிக அவசியம்.* அறிவியல் இல்லாத ஆன்மிகம் மூடத்தனம். ஆன்மிகம் இல்லாத அறிவியல் ஆணவத்தின் அடையாளம்.* அறிவு நூல்களை கரைத்து குடித்திருந்தாலும், ஆன்மிக அறிவு இல்லாவிட்டால் அனைத்தும் வீணாகி விடும்.* இதயப்பூர்வமாக கடவுளைத் தேட வேண்டியது மனிதனின் அடிப்படை கடமை.* சுயநலம் இல்லாமல் பிறருக்கு சேவை செய்தால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.* மனிதனின் குணத்தை உருவாக்குவதில், உணவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.* சில நேரத்தில் பேசுவதைக் காட்டிலும், மவுனம் காப்பது மிகுந்த நன்மையளிக்கும்.* வெளியில் தெரியும் வறுமையை விட, மனத்தில் இருக்கும் வறுமையே அபாயமானது.சொல்கிறார் ராதாகிருஷ்ணன்