உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சி தரும் மந்திர சாவி!

* மகிழ்ச்சிக்குரிய மந்திரச்சாவி நம் மனதில் இருக்கிறது. கோடீஸ்வரன் முகத்தில் கவலையும், ஏழையின் முகத்தில் மகிழ்ச்சியும் இருக்கலாம். மனதைப் பொறுத்தே இது அமையும். * மற்றவர் தயவில் கிடைக்கும் பால் சோற்றை விட சுய உழைப்பில் கிடைக்கும் தண்ணீரும் சோறும் உயர்வானது.* இரவில் தேவையானதை பகலில் தேடி வைத்து கொள்வது போல, முதுமையில் தேவையானதை இளமை காலத்தில் மனிதன் தேட வேண்டும்.* குளிக்காதவன் மீது ஆற்றுக்கு கோபம் உண்டாகாது. அதுபோல கடவுளும் தன்னை வணங்காதவர்களை தண்டிப்பதில்லை.* பலர் கையெழுத்திட்ட விண்ணப்பத்திற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பர். அது போல பலரின் கூட்டுப் பிரார்த்தனைக்கும் கடவுள் உடனடியாக தீர்வு அளிப்பார்.* உண்மையை பேசுங்கள். தர்ம வழியில் வாழ்வு நடத்துங்கள். பெற்றோர், குருவை தெய்வமாக வழிபடுங்கள். இவையே நல்லவர்களின் இயல்பு.* கடவுள் நமக்கு செய்வது அத்தனையும் அருள் தான். சில சமயத்தில் சோதனை போல வாழ்வில் துன்பம் நேருவதாக தோன்றலாம். அதுவும் கூட நம் அறியாமையே.தருகிறார் வாரியார்