4448
UPDATED : டிச 30, 2021 | ADDED : டிச 30, 2021
இந்த எண்ணுக்கு என்ன விசேஷம். உலகில் 4448 வியாதிகள் இருப்பதாக கணக்குண்டு. இந்த நோய்களை தீர்க்க வல்லவரான சிவபெருமான் நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதராக அருள்புரிகிறார். இங்குள்ள அம்மன் தையல்நாயகியின் கையில் தைலப்பாத்திரம் உள்ளது. தைலம், அமிர்த கலசம், வில்வ மரத்தடி மண் கொண்டு அம்மன் பக்தர்களின் நோய்களை போக்குகிறாள். மருத்துவ குணம் மிக்க வேப்ப மரம் இங்கு தலவிருட்சம். நோய் தீர்க்கும் மருந்தான 'திருச்சாந்துருண்டை' பிரசாதம் இங்கு வழங்கப்படுகிறது.