6666 பாடல் பாடியவர்
UPDATED : அக் 20, 2017 | ADDED : அக் 20, 2017
யாழ்ப்பாணத்தில் சைவ மரபில் தோன்றியவர் பாம்பன் சுவாமிகள். குமரகுருதாச சுவாமிகள் எனப்பட்ட இவர், ராமேஸ்வரம் அருகே பாம்பனில் வாழ்ந்ததால், 'பாம்பன் சுவாமிகள்' எனப்பட்டார். 6666 பாடல்கள் பாடிய இவரது வாழ்வில் முருகனருளால் அற்புதங்கள் நிகழ்ந்தன. அண்மைக்காலத்தில் வாழ்ந்த இவர் பாடிய சண்முக கவசம் பாராயண நூலாகத் திகழ்கிறது. உயிர், மெய் எழுத்துக்கள் முப்பதையும் முதல் எழுத்தாகக் கொண்டு அமைந்த நூல் இது. பஞ்சாமிர்தவண்ணம் என்னும் பாடலால் முருகனுக்கு அபிஷேகம் செய்து மகிழ்ந்தார்.