அழகர் சித்திரை விழா
UPDATED : ஏப் 15, 2011 | ADDED : ஏப் 15, 2011
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா 9 நாட்கள் நடக்கும். முதல் மூன்றுநாட்கள் அழகர்கோவிலில் விழா நடக்கும். நான்காம்நாள் மதுரைக்கு அழகர் புறப்படுவார். அன்று மதுரை மக்கள் அழகரை எதிர்கொண்டு வரவேற்கும் 'எதிர்சேவை' நிகழும். ஐந்தாம்நாள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்குவார். ஆறாம்நாள் காலை சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபம் வருவார். பின்பு கருடவாகனத்திற்கு மாறி, மண்டூகமகரிஷிக்கு மோட்சம் அருள்வார். இரவில் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறும். ஏழாம் நாள் காலை அனந்தராயர் தந்தப்பல்லக்கில் ராஜாங்கசேவை நடைபெறும். 8ம்நாள் மைசூரு மண்டபத்தில் இருந்து கள்ளர் கோலத்தில் பூப்பல்லக்கில் புறப்படுவார். 9ம்நாள் அழகர்கோவிலைச் சென்றடைவார்.