அன்னதான ஆற்றல்
UPDATED : அக் 27, 2023 | ADDED : அக் 27, 2023
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என சொன்னவர் வள்ளலார். அவரது வழிபாட்டில் முக்கியமானது அன்னதானம். கடலுார் மாவட்டம் வடலுாரில் சத்திய தருமசாலையில் முதன்முதலில் தொடங்கிய அன்னதானம் இன்று வரை தடை படாமல் நடைபெற்று வருகிறது. துாய மனதோடு அன்னதானம் செய்பவரை இயற்கை வழிநடத்தும். இவ்வுலகில் அவரை வாழ்வாங்கு வாழ வைக்கும். வெயிலும் மழையும் அவரை ஒன்றும் செய்யாது. நோய்கள் அணுகாது. வறுமை தீண்டாது. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். அவர் நினைத்தால் மட்டுமே அவரது உயிரானது பிரியும்.