ரகசியம்
UPDATED : ஆக 09, 2024 | ADDED : ஆக 09, 2024
தலை, கழுத்து, கைகளில் பாம்பை ஆபரணமாக சிவன் அணிந்திருப்பார். இதற்கு விசேஷ காரணம் உண்டு. மனிதனுக்கு கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும் ஐம்புலன்கள் உள்ளன. இவை தீயவழிகளில் ஈடுபட்டால் விஷத்தை உமிழும் பாம்பு போல துன்பத்திற்கு ஆளாக நேரிடும். இவற்றை அடக்கி நல்வழியில் செலுத்தினால் அழகூட்டும் ஆபரணமாக இருக்கும். இதை உணர்த்தவே சிவன் நாகத்தை ஆபரணமாக அணிந்துள்ளார். பாம்பின் ஐந்து தலைகளும் ஐம்புலனைக் குறிக்கும். தங்கம், வெள்ளி, பித்தளையால் ஆன நாக ஆபரணத்தை சிவலிங்கத்தின் மீது ஆபரணமாக சாத்துவர். நாக லிங்கத்தை தரிசித்தால் தீய எண்ணம் மறையும். நல்ல புத்தி ஏற்படும்.