உள்ளூர் செய்திகள்

கல்வித்திருநாள்

ஆவணி அவிட்டத்தை கல்வித்திருநாள் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு வேதம் கிடைத்த நன்னாள் ஆவணி அவிட்டம். இதனால் இதனை வேதத்தின் ஆண்டு விழா எனலாம். பவுர்ணமியும், அவிட்ட நட்சத்திரமும் கூடிய இந்த நாளில் வேதம் ஓதும் அந்தணர்கள் நடத்தும் வழிபாட்டிற்கு 'உபாகர்மா' என்று பெயர். வேதம் கற்கத் தொடங்கும் நாள் என்பதால் 'உபாகர்மா' எனப்பட்டது. இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடி புதிதாகப் பூணுால் அணிந்து வேதத்தை அத்யயனம் (படிக்க) செய்யத் தொடங்குவர். தற்காலத்தில் கோயிலில் ஒன்று கூடி இந்த சடங்கை நடத்துகின்றனர். இன்று வேத கால ரிஷிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தர்ப்பணம் செய்வர்.